ஈஷா கிராமோத்சவத்தால் எங்க ஊர்ல பசங்க குடிப்பழக்கத்தை விட்டுட்டாங்க - ஒருசேரிபுதூர் பூபதி

Prasanth K

திங்கள், 15 செப்டம்பர் 2025 (14:50 IST)

இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு பின்னால் செல்வது என்பது தான், இன்று நம் சமூகத்திற்கு முன் இருக்கும் மாபெரும் சவால். சட்டங்கள் மற்றும் காவல்துறை மூலம் போதை வஸ்துக்களின் புழக்கத்தை வேண்டுமானால் ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். ஆனால் இது முழுமையான தீர்வாக இருக்க முடியாது. இளைஞர்கள் அதனை நாடாமல் இருக்க செய்வதே, சரியான தீர்வாக இருக்க முடியும். இதற்கு ஒரு சமூகமாக நாம் பல்வேறு செயல்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  

 

இந்நிலையில், போதை வஸ்துக்களை இளைஞர்கள் நாடாமல் இருக்க, விளையாட்டை ஒரு தீர்வாக ஈஷாவின் கிராமோத்சவம் முன்னெடுப்பு முன் வைக்கிறது. போதையில் இருந்து விடுபட, ஈடுபடாமல் இருக்க விளையாட்டு எப்படி தீர்வாக இருக்க முடியும் என்ற பொதுவான கேள்வி நம் எல்லாருக்கும் எழ வாய்ப்பு உள்ளது. ஆனால் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால், ஈரோடு அருகே இளைஞர்கள் சிலர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். 

 

இதுகுறித்து, ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஒருசேரிபுதூரைச் சேர்ந்த வாலிபால் வீரர் பூபதி என்ற இளைஞரிடம் பேசினோம். “எங்கள் ஊரில் இரண்டு வாலிபால் அணி உருவாக்கினோம். அதில் ஒரு அணிக்கு நான் கேப்டனாக உள்ளேன். 15 வருஷமாக வாலிபால் விளையாடுகிறேன். நான் சிவில் சைட் இன்ஜினியராக வேலை செய்கிறேன். எங்க அப்பா வாலிபால் விளையாண்டு வந்தாங்க. அதை நானும் பின்பற்றி விளையாடி வருகிறேன். விளையாடுவதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியுது. 

 

ஈஷா கிராமோத்சவம் போட்டிகளுக்கு முன்பு எங்க ஊர்ல ரொம்ப காலமாக விளையாட்டில் ஆர்வமில்லாம இருந்தோம். அந்த சமயத்துல எங்க பசங்க சிலர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிட்டாங்க. ஈஷா கிராமோத்சவம் போட்டி அறிவிப்புக்கு பிறகு, எங்க ஊர் இளைஞர்களைத் திரட்டி 2 வாலிபால்  டீம் அமைத்தோம். அதுல ஒரு டீமுக்கு நான் கேப்டனானேன். 

 

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள எங்க ஊர் இளைஞர்கள் ரொம்ப ஆர்வம் காட்டுனாங்க. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதால், நிறைய பசங்க குடிப்பழக்கத்தில் இருந்து வெளியில் வந்துட்டாங்க. ஈஷா விளையாட்டுப் போட்டி இளைஞர்களின் வாழ்க்கையை மாத்திடுச்சு. இதற்கு ஈஷாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். 

 

இந்த வருஷம் அந்தியூரில் நடைபெற்ற கிளஸ்டரில் ஜெயித்து விட்டோம். அதன் பிறகு, கோவையில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் தோற்று விட்டோம். போன வருஷம் மண்டல அளவில் ரன்னர் வந்த நாங்க, இந்த வருஷம் காலிறுதியில் தோற்றது வருத்தமா இருக்கு. 

 

ஆனாலும், என்ட்ரன்ஸ் பீஸ் இல்ல. போக்குவரத்து செலவுக்கு ஈஷா பணமும் தர்றாங்க. ஈஷாவோட இதுபோன்ற சேவைகள் தான், மக்கள் கிட்ட ஈஷாவை கொண்டு போய் சேர்க்குதுன்னு நினைக்கிறேன். 

 

தொடர்ந்து கிளஸ்டர் போட்டிகளில் ஜெயிக்கும் எங்கள் ஊரில் கிளஸ்டர் போட்டிகள் நடத்த வேண்டும். அப்படி நடத்தும் போது, எங்க ஊர்ல இருக்கும் விளையாட்டு ஆர்வமுள்ள பெண்களும் த்ரோபால் போட்டிகளில் பங்கேற்பாங்க. அதேபோல், ஆண்டுதோறும், ஒவ்வொரு கிராமத்தில் கிளஸ்டர் போட்டிகள் நடத்துனா, கிராமப்புற மக்களிடையே ஈஷா கிராமோத்சவம் பல மாற்றங்களை கொண்டு வரும். என் அனுபவத்தில் மற்ற போட்டிகளுக்கு போனால் வீட்டில் அனுமதிப்பதில்லை. 

 

ஈஷா போட்டிகளுக்கு வீட்டில் மட்டுமில்ல. சமுதாயத்திலும் நல்ல பெயர் உள்ளது. அதனால, ஈஷா கிரோமத்சவம் போட்டிகளில் விளையாட எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்குது.” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்