காலையில் உணவகம்; மாலையில் கொள்ளையகம்! – சென்னையில் பலே திருடர்கள்!

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (14:06 IST)
சென்னையில் காலையில் உணவகம் நடத்தி கொண்டு மாலையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பேச்சியம்மாள் என்பவரை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றது மர்ம கும்பல்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் உணவகம் நடத்தி வரும் ரேவதி என்ற பெண் தனது மைத்துனரிடன் சேர்ந்து நகை திருட்டில் ஈடுப்பட்டது தெரிய வந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் ரேவதி மற்றும் அவர் மைத்துனரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட ரேவதி கார் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வாங்கியதும், பிறகு அதற்கு தவணை தொகை கட்ட முடியாததால் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் ரேவதியிடமிருந்து 13 சவரன் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

உணவகம் நடத்திக்கொண்டே செயின் பறிப்பில் ரேவதி ஈடுபட்டு வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்