அடுத்த பிரதமர் ஒரு தமிழர் தான்: பிரபல ஜோதிடர் கணிப்பு..!

Mahendran
சனி, 19 அக்டோபர் 2024 (15:10 IST)
இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழ் பேசத் தெரிந்த ஒரு தமிழர்தான் என்று பிரபல ஜோதிடர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை ஒரு தமிழர் கூட பிரதமரானது இல்லை.  காமராஜர் மற்றும் ஜிகே முப்பனார் ஆகிய இருவருக்கும் பிரதமர் பதவி வகிக்க வாய்ப்பு இருந்தபோதிலும், அது அவர்கள் மிஸ் செய்தனர்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஒளிமயமான எதிர்காலம்" என்ற நிகழ்ச்சியில், தென்காசியை சேர்ந்த நேயர் ஒருவர் 2044-ல் தென்காசியை சேர்ந்த ஒருவர் இந்திய பிரதமராக வேண்டும் என்று காசி விசுவநாதரிடம் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், "2044 வரை ஏன் காத்திருக்க வேண்டும்? பெரும்பாலும் அடுத்த பிரதமர் தமிழ் பேசத் தெரிந்தவராக இருப்பார்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "தமிழ் மொழி பேசத் தெரிந்தவர் தான் அடுத்த பிரதமர்; அதுதான் என்னுடைய கணிப்பு" என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து, அவர் யார் என நெட்டிசன்கள் தங்கள் யூகங்களை பதிவு செய்வதால், பரபரப்பு அதிகரித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்