தொழிற்சாலைகளுக்கான பீக் அவர்ஸ் கட்டணம் குறைப்பு

சனி, 11 நவம்பர் 2023 (20:40 IST)
தமிழகத்தில்  சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான  பீக் அவர்ஸ் நேர மின் கட்டணத்தை குறைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக  ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்குத் தேவையான  பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தீபாவளிக்கு மக்கள் தம் சொந்த ஊருக்குச் செல்வதற்கு கூடுதல் பேருந்துகள் அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.

இந்த நிலையில் மற்றொரு புதிய அறிவிப்பை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிற்சாலைகளுக்கான பீக் அவர்ஸ் கட்டணம்  குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அதில், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான  பீக் அவர்ஸ் நேர மின் கட்டணத்தை குறைக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை பொறுத்து 15% இருந்து 25% வரை பீக் அவர்ஸ் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்