இன்று மாலை 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

சனி, 11 நவம்பர் 2023 (15:51 IST)
இன்னும் சில மணி நேரத்தில் அதாவது இன்று மாலை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றின் திசை வேறுபாடு காரணமாக தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக வங்கக்கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு  தோன்று இருப்பதால் இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை அல்லது இரவு தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதனை அடுத்து மேற்கண்ட எட்டு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்