மீண்டும் சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை!

வெள்ளி, 26 நவம்பர் 2021 (08:21 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. 
 
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில் சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அநேக இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கோயம்பேடு, அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், வில்லிவாக்கம், அயனாவரம், பெரம்பூர், எழும்பூர், அமைந்தக்கரை, பாரிமுனை, மவுண்ட் ரோடு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மதுரவாயல், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்