தமிழகத்தில் ரெட் அலர்ட்...டவ் -தே புயலுக்கு வாய்ப்பு !

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (21:16 IST)
தென்கிழக்கு அரப்பிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாம வலுவடையும் என சென்னை வாவிலை ஆய்வு மையம் கூறியுள்ளது..

இதுவலுவடைந்து புயலாக மாறலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இது புயலாக மாறியது என்றால் இதை டவ்-தே எனப் பெயரிடப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் தமிழகத்திலுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யலாம் என ரெட் அலர்ட் தந்துள்ளது. அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 குழுக்கள் 13 தேசியப் பேரிடர் குழுக்களும் பாதுகாப்பு காரணங்களுக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்