தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை! தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்!

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (11:56 IST)
கடந்த சில நாட்களாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



இலங்கை தெற்கு கடற்கரைப்பகுதியை ஒட்டிய வங்க கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக கன்னியாக்குமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கன்னியாக்குமரி, நெல்லை மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை இன்னும் தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் பல சாலைகளிலும், தெருக்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்மழை காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளதால் நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைகளுக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமிரபரணியில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்