ரூ.6000 நிவாரண தொகை கிடைப்பதில் பிரச்சனையா? உதவி எண்கள் அறிவிப்பு..!

ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (08:07 IST)
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள பொது மக்களுக்கு இன்று முதல் ரூ.6000  நிவாரணத் தொகை வழங்கப்பட இருக்கும் நிலையில் நிவாரணத் தொகை கிடைப்பதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் மிக்சாம் புயலால் ஏற்பட்ட பெரும் சேதம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கான டோக்கன்கள் கடந்த இரண்டு நாட்கள் ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் ரூபாய் 6000 வழங்கப்பட உள்ளதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதனை ஆரம்பித்து வைக்க போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஒரு சிலருக்கு டோக்கன் கிடைக்காத நிலையில் இது குறித்த சந்தேகங்கள் கேட்பவர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1100, 044 28592828 என்ற எண்ணை பயன்படுத்தி தங்களது உதவிகளை கேட்டுக் கொள்ளலாம்.

இன்று முதல் அதாவது டிசம்பர் 17 முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த தொலைபேசி இயங்கும் என்பதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்