அதிமுகவோடு சமரசம்..? தனிக்கட்சி தொடங்கும் ஓபிஎஸ்!? - ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

Prasanth K

திங்கள், 14 ஜூலை 2025 (11:37 IST)

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில், கட்சி பொதுக்குழு கூட்டத்தில் வைத்து ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. அதை தொடர்ந்து கட்சி தொடர்பாக இருவருக்கும் இடையே பூசல்கள் தொடர்ந்து வருகிறது.

 

இதனால் அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கிய ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பாஜக கூட்டணியில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அதிமுகவும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே தற்கால அமைதியை பாஜக தலைமை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி அறிவிப்புக்கு பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது குறைந்துள்ளது.

 

அதை தொடர்ந்து இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே கட்சி இல்லாமல், சின்னம் இல்லாமல் ஓபிஎஸ் போட்டியிட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் புதிய கட்சி தொடங்குவது குறித்து தற்போது ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் ஓரளவு தொகுதிகளை கேட்டு வாங்க கட்சி அடையாளம் அவசியமாகிறது என்று ஆதரவாளர்களும் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்