அரசு 2 ஆம் தலைநகர் குறித்து யோசிக்கவில்லை என முதல்வர் கூறிய போதும் இதனை மீண்டும் வலியுறுத்தி வருகிறார் அமைச்சர் உதயகுமார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரண்டாம் தலைநகர் குறித்து அமைச்சர்கள் விவாதம் செய்து வருகின்றனர். மதுரையை இரண்டாவது தலைநகராக வேண்டும் என்று அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
இதனை அடுத்து வெல்லமண்டி நடராஜன் திடீரென மதுரை வேண்டாம் திருச்சி தான் இரண்டாவது தலைநகராக வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் அமைச்சர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முற்றுபுள்ளி வைக்க எடப்பாடி பழனிச்சாமி இது பற்றி பேசினார்.
அவர், இரண்டாவது தலைநகர் குறித்து அமைச்சர்களின் கருத்துக்கள் அவரவர் சொந்த கருத்துக்கள் என்றும் அது அரசின் கருத்துக்கள் அல்ல என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் இரண்டாவது தலைநகர் குறித்த எண்ணம் எதுவும் இல்லை என்பது உறுதி ஆனாது.
ஆனால் இப்போது அமைச்சர் ஆர்பி உதயகுமார், மதுரையை 2 ஆம் தலைநகராக்க இப்போது தான் ஞானம் பிறந்ததா என கேட்கலாம். ஆனால் இப்போது இது அவசியமாக உள்ளது. மதுரைக்கு 2 ஆம் தலைநகர் ஆகும் தகுதி உள்ளதா என அனைவரும் விவாதிக்கும் உரிமை உள்ளது.
கோரிக்கை முன்வைக்கும் போது எத்தனை சாயங்கல் பூசப்படும், விமர்சனம் எழும் என தெரிந்துதான் கோரிக்கையை முன் வைத்தோம். திருச்சியை முன்நிறுத்தும் வெல்லாமண்டி நடராஜனின் கோரிக்கையும் நியாமானதே. ஆனால், மதுரையா திடுச்சியா என்ற விவாதம் மேற்கொண்டு நல்ல கோரிக்கையை திசை திருப்பி சிக்கலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசு 2 ஆம் தலைநகர் குறித்து யோசிக்கவில்லை என முதல்வர் கூறிய போதும் இதனை மீண்டும் வலியுறுத்தி வருகிறார் அமைச்சர் உதயகுமார். எனவே அடுத்த முதல்வர் யார் என சர்ச்சை எழுத்தது போல அடுத்த தலைநகர் எதுவென சர்ச்சை எழாத வகையில் முதல்வர் இதனை சரிகட்ட வேண்டும் என கட்சியினர் எதிர்ப்பார்க்கின்றனர்.