நேற்று இரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் அரசியல் விமர்சகர் ரவீந்தர் துரைச்சாமி என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க ரவீந்தர் துரைச்சாமி தான் ஐடியா கொடுத்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் ரஜினி பின்வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அரசியலில் இருந்து கிட்டத்தட்ட ஒதுங்கி இருக்கும் ரஜினிகாந்தை மீண்டும் அரசியலுக்கு வரவழைக்க, அதுவும் சீமானுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம், வரவழைக்க ரவீந்தர் துரைசாமி திட்டமிடுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விஜய் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாகி வரும் நிலையில், விஜய்யை ஆரம்ப முதலே எதிர்த்து வருபவர் ரவீந்தர் துரைச்சாமி. அவர் நான்கு சதவீதம் ஓட்டு தான் வாங்குவார் என்றும், அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். சீமானும் விஜய்யை எதிர்க்கும் நிலையில், விஜயை எதிர்க்கும் இருவரும் ஒன்று சேர்ந்து ரஜினியை பகடை காயாக மாற்ற முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், இன்னும் என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.