என்கவுண்டர் அபாயத்தில் ராம்குமார்?

கே.என்.வடிவேல்
திங்கள், 4 ஜூலை 2016 (23:47 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் என்கவுண்டர் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்,கடந்த ஜூன் 24 ம் தேதி, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். ஆனால், கொலைக்கு காரணமான குற்றவாளி குறித்து தகவல் கிடைக்காமல் போலீசார் தவித்து வந்தனர்.
 
இந்த நிலையில், சுவாதி கொலைக்கு காரணமான ராம்குமார் என்பவரை நெல்லையில் வைத்து போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இந்த அதிரடி வேகத்தை கண்டு முதல்வர் ஜெயலலிதா முதல்பாராட்டு தெரிவித்தார்.
 
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று, பாளையங்கோட்டையிலிருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
 
ஆம்புலன்ஸில் வந்த ராம்குமார் தன்னை போலீசார் என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற பயத்திலே இருந்துள்ளார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனையடுத்தே, அவர் பயம் தெளிந்துள்ளார்.
 
இதனையடுத்து, ஆம்புலன்ஸில் சென்னை வந்த ராம்குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்  உள்நோயாளியாகச் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்