சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது போலீஸ் காவலில் விசாரணையில் உள்ளார் ராம்குமார். இவர் விசாரணைக்கு மறுத்து நீதிபதியிடம் கெஞ்சியதாக தகவல்கள் வந்துள்ளன.
நேற்று புழல் சிறையில் குற்றவாளியை அடையாளம் காண அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதனையடுத்து ராம்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது காவல்துறை. மாலை 3.10 மணிக்கு மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்னிலையில் ராம்குமார் கொண்டுவரப்பட்டு விசாரணை நடந்தது.
இந்த விசாரணையை கேட்டுக்கொண்டிருந்த ராம்குமார், போலீஸ் விசாரணைக்கு மறுத்து, தன்னை போலீஸ் காவலில் அனுப்ப வேண்டாம் என மாஜிஸ்திரேட்டிடம் கெஞ்சியுள்ளார்.
மூன்று மணி நேர விவதத்திற்கு பின்னர் ராம்குமார் 3 நாள் போலீஸ் காவலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பின்னர் வரும் சனிக்கிழமை மீண்டும் புழல் சிறாயில் அடைக்கப்பட உள்ளார்.