ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐ இடமிருந்து மீண்டும் காவல்துறைக்கு மாற்றம்!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (12:15 IST)
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐ இடமிருந்து மீண்டும் காவல்துறைக்கு மாற்றம்!
மாநில காவல்துறை கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் சிபிஐ இடம் செல்வது வழக்கம் என்ற நிலையில் தற்போது சிபிஐ கண்டுபிடிக்க முடியாத ஒரு வழக்கு மீண்டும் காவல்துறையிடம் வந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. 
 
அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ராமஜெயம் என்பவரின் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் தற்போது இந்த கொலை வழக்கை மீண்டும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ கடந்த சில மாதங்களாக விசாரித்த நிலையில் இதுவரை குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவிடம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்