ஐ.எஸ் பயங்கரவாத தலைவன் சுட்டுக் கொலை! – அமெரிக்கா அறிவிப்பு!

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (13:35 IST)
சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. அவற்றில் நடப்பில் தீவிரமான போர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். கடந்த பல ஆண்டுகளாக சிரியாவில் அரச படைகளுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான உள்நாட்டு போரில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் அகதிகளாகியுள்ளனர்.

இந்நிலையில் சிரியாவில் ஐ.எஸ் ப்யங்கரவாதிகளை அடக்கும் முயற்சியில் அமெரிக்க சிறப்புப் படைகளும் செயல்பட்டு அவ்வபோது ஐ.எஸ் பதுங்கு தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது அவ்வாறாக அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவின் தலைவன் அபு இப்ராஹிம் அல் குரேஷி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்