இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்… ராமதாஸ் கோரிக்கை!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (12:56 IST)

தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தைச் சேர்ந்த மக்களின் வாரிசுகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராமதாஸின் அறிக்கை:-

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமை கூட கடந்த 20 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர்களின் தந்தை நாடு என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாடு இந்த வாய்ப்பைக் கூட வழங்க மறுப்பது அநீதியாகும். இலங்கையில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டும், உயிருக்கு அஞ்சியும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளனர். 1980ஆம் ஆண்டுகளில் தொடங்கிய அகதிகளின் வருகை 2009ஆம் ஆண்டில் போர் முடிவடைந்த பிறகும் கூட நீடித்தது. இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள 108 அகதிகள் முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் 18,944 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் தவிர முகாம்களுக்கு வெளியில் 13,533 குடும்பங்கள் சொந்த ஏற்பாட்டில் வாழ்ந்து வருகின்றன.

ஈழப்போரில் அனைத்தையும் இழந்து, தாயகத்திற்கு மீண்டும் செல்ல முடியாமலும், சென்றாலும் நிம்மதியாக வாழமுடியாத நிலையிலும் உள்ளவர்கள்தான் இன்னும் அகதிகளாகத் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்களின் ஒற்றைக் கனவு தங்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து வேலைவாய்ப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கி விடவேண்டும் என்பதுதான். கலை மற்றும் அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் அவர்களுக்குச் சாத்தியமாகிவிட்டாலும், மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அதற்குக் காரணம் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கப்படாததுதான். கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தகுதியான மதிப்பெண்களைப் பெற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் ஏமாற்றமடைந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஏராளம்.

அவர்கள் செய்த ஒரே பாவம் ஈழத்தமிழ் அகதிகளுக்கு வாரிசுகளாகப் பிறந்ததுதான். ஈழத்தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தாராளமாக வழங்கப்படுகின்றன. ஆனால், ஈழத் தமிழர்களின் தந்தை நாடான தமிழ்நாட்டில் அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது அநியாயமாகும். ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 20 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. பிற அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தாலும் கூட இதுவரை அக்கோரிக்கை நிறைவேறவில்லை. மருத்துவப் படிப்பில் ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நிறைவேற்ற முடியாத கோரிக்கை அல்ல. அது நிறைவேற்றப்படக்கூடாத ஒன்று அல்ல. ஆனால், அந்தக் கோரிக்கையைச் செயல்படுத்தும் அரசியல் துணிச்சல்தான் தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. 1980களின் தொடக்கத்தில்தான் ஈழத்தமிழ் அகதிகள் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கினார்கள். 1984ஆம் ஆண்டில் ஈழத்தமிழ் அகதி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தலா

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்