டிவிட்டரோடு இரங்கலை முடித்த ரஜினி: பாஜகவின் மீது பயமா?

சனி, 25 ஆகஸ்ட் 2018 (13:51 IST)
சமீபத்தில் முன்னாள் முதல்வர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் டெல்லியில் எரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது அஸ்தியை கரைக்க நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டது. 
 
வாஜ்பாயின் அஸ்தி தமிழகம் கொண்டுவரப்பட்டு சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டபோது, பாஜக நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். 
 
ஆனால், நதி நீர் இணைப்பு என்னும் வாஜ்பாயின் கனவு திட்டம் குறித்து ஆதரவாக பேசி வந்த ரஜினி, அவரது மறைவிற்கு டிவிட்டரில் இரங்கலை தெரிவித்ததோடு முடித்துக்கொண்டார். வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த டெல்லியும் செல்லவில்லை, சென்னை பாஜக அலுவலகத்திற்கும் வரவில்லை. 
 
இதனால், ரஜினிக்கு பாஜக மீது ஏதோ பயமிருக்கிறது என செய்திகள் பரவியது. ரஜினியை ஏற்கனவே பாஜகவின் பி பிரிவு என கூறி வரும் நிலையில், ரஜினி தனது எதிர்கால அரசியல் பயணத்தை கணக்கில் கொண்டு இவ்வாறானா பேச்சுக்கு முற்றுபுள்ளி வைக்க பாஜகவை சார்ந்த நிகழ்வுகளை புறக்கணித்து வருகிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்