40 நிமிடங்கள் பொளந்து கட்டிய ரஜினி! அனைத்து விமர்சனங்களுக்கு அதிரடி பதில்

திங்கள், 5 மார்ச் 2018 (21:09 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து சுமார் 40 நிமிடங்கள் எந்தவித தங்கு தடையும் இன்றி அருவி போல தட்டுத்தடுமாறாமல் பேசினார். தன் மீது ஊடகங்கள், அரசியல் கட்சிகள் வைத்த அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளித்தார். அவரது உரையின் ஒரு பகுதி இதோ

எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்ற சந்தேகம் எனக்கே உள்ளது. இங்கு கூடியிருக்கும் கூட்டம் அரசியல் மாநாடு போல் உள்ளது. இதில் அரசியல் பேச வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், அரசியல் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையைச் சரியாக செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோருடன் பழகியதால் நானும் அரசியல் கற்றுக்கொண்டேன். நான் என் வேலையைச் சரியாகச் செய்து வருகிறேன். 1996 முதல் அரசியல் தண்ணீர் என் மீது தெளிக்கப்பட்டுள்ளது. அரசியவாதிகள் அவர்களது வேலையை சரியாக செய்யவில்லை. அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை ஏன் ஏளனம் செய்கிறீர்கள்.

இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள். கட்சியை அறிவிக்கும் முன்பே கொள்கை என்ன என்று கேட்பது பெண் பார்க்க செல்லும் முன் திருமண பத்திரிகை எங்கே என்று கேட்பதுபோல் உள்ளது. தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மை தான். தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றி இடத்தை நிரப்பவே நான் அரசியலுக்கு வருகிறேன். கருணாநிதி போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது. 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர் கட்சியை கட்டிக்காத்தார். இந்தியாவிலேயே கட்சியை கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா.

அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்ஜிஆராக முடியாது. அவர் ஒரு தெய்வ பிறவி. அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றியவர் அவர். இன்று நான் வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பதும் முக்கிய காரணம் அவர் தான். படிப்பில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறக் கூடாது. வாழ்க்கையில் வசந்த காலம் என்பது மாணவர் பருவம் தான்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்