பொய் வழக்குகளால் அவரை ஒன்றும் செய்ய முடியாது: சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினி ஆறுதல்..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (18:16 IST)
ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பொய் வழக்குகளால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என சந்திரபாபு நாயுடு மகனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் ஆறுதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர் சந்திரபாபு நாயுடு என்றும் பொய் வழக்குகள் மற்றும் சட்டவிரோத கவிதைகளால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.
 
மேலும் சந்திரபாபு நாயுடுவின் நற்செயல்களும் தன்னலமற்ற பொது சேவையும் அவரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வரும் என்றும் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்