அப்போது அவரை சூழ்ந்த பத்திரிகையாளர்கள் 'அரசியல் களத்தில் எப்போது இறங்குவீர்கள்? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, 'களம் இறங்குவதற்கு தற்போது அவசரம் இல்லை” என்று கூறினார். மேலும், 'காலா' பட சூட்டிங் முடிந்து விட்டது என்றும், தனது பிறந்த நாளுக்குப் பின்னர் ரசிகர்களைச் மீண்டும் சந்திக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் தெரிவித்தார்.
'தற்போது அவசரம் இல்லை” என்று ரஜினி கூறினாலும், அவர் அரசியல் கட்சியை ஆரம்பிக்க தயாராகிவிட்டதாகவும், மிக விரைவில் இதுகுறித்த செய்தி வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.