இந்நிலையில் ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் உள்ளது மந்த்ராயலா கோவில். இங்குள்ள ராகவேந்திரா கோவிலில், இன்று காலை வழிபாடு செய்துள்ளார் ரஜினி. வெள்ளை வேட்டி, சட்டையில் கோவிலுக்குச் சென்ற ரஜினி, சட்டை இல்லாமல் வெறும் வேட்டியுடன் ராகவேந்திரரை வேண்டியுள்ளார். அவரது மந்த்ராலயம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.