பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவுரை கூறிய ரஜினிகாந்த்

புதன், 22 நவம்பர் 2017 (19:41 IST)
விமானத்தில் தன்னுடன் பயணித்த பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவுரை கூறியுள்ளார் ரஜினிகாந்த்.


 
கும்பகோணத்தை அடுத்துள்ள அம்மாசமுத்திரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள், அறிவியல் கண்காட்சி பார்ப்பதற்காக விமானத்தில் பெங்களூரு சென்றுள்ளனர். அந்த விமானத்தில் ரஜினி இருப்பதைப் பார்த்ததும், ‘ரஜினி அங்கிள்...’ என மகிழ்ச்சியுடன் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
 
அவரும் ஒவ்வொருவராக அழைத்து, பெயர் என்ன, எந்த வகுப்பு படிக்கிறீர்கள் போன்ற விவரங்களைக் கேட்டார். விமானத்திலேயே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து பாட, நன்றி சொன்னார். விமானத்தில் இருந்து இறங்கியதும், அனைவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். 
 
“நல்லா படிங்க, கவனத்தைச் சிதறவிடாதீங்க. சிறந்த மாணவர்களாக நீங்க வரணும். பெற்றோர்கள், பெரியோர்கள், தாய்நாட்டை மதிக்கணும். ஆல் தி பெஸ்ட்” என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார் ரஜினி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்