திமுகவுக்கு அழகிரி, அதிமுகவுக்கு செங்கோட்டையன்: ரஜினியின் மெகா திட்டம்

திங்கள், 24 ஜூன் 2019 (21:12 IST)
அதிமுக ஆட்சியை இதோ கவிழ்த்துவிடுவேன், அதோ கவிழ்த்துவிடுவேன் என்று கூறி வரும் முக ஸ்டாலின், வரும் 2021ஆம் ஆண்டு வரை அவரால் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வருடங்கள் சட்டமன்ற தேர்தலுக்கு கால அவகாசம் இருப்பதால் ரஜினிகாந்த், ஆற அமர கட்சியை தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம்
 
ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன் அடைந்த தோல்வியையும் அவர் ஆராய்ந்து பார்த்ததில் கமல் கட்சியில் கமல்ஹாசனை தவிர இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை என்பது தெரியவந்தது. இதே குறைதான் விஜய்காந்த் கட்சி ஆரம்பித்தபோதும் இருந்ததால் விஜயகாந்த் மட்டுமே முதல் தேர்தலில் வெற்றி பெற்றார்.
 
அதேபோல் நாளை தன்னுடைய கட்சி ஆரம்பிக்கப்பட்டாலும் ரஜினியை தவிர பிரபலமான தலைவர்கள் யாரும் இல்லை என்ற குறை வந்துவிடக்கூடாது என்ற கவனத்தில் ரஜினி உள்ளாராம். இதனையடுத்து அதிமுக, திமுகவில் இருந்து முக்கிய பிரபலங்களை இழுக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களை முக அழகிரியை வைத்தும், அதிமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களள செங்கோட்டையனை வைத்தும் இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்