திருநாவுக்கரசரை திடீரென சந்தித்த ரஜினிகாந்த்: என்ன காரணம்?

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (13:14 IST)
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசரை அவரது வீட்டில் வைத்து ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகக் காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றி வந்த திருநாவுக்கரசரை அந்த பதவியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், திருநாவுக்கரசர் ராகுல்காந்தி எது செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும் என கூறினார். மேலும் தாம் கடைசி வரை காங்கிரஸ் கட்சிக்காக உழைப்பேன் எனவும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், சென்னை அண்ணாநகரில் உள்ள திருநாவுக்கரசரின் வீட்டிற்கு சென்று தனது மகளின் திருமண பத்திரிக்கையை அவரிடம் வழங்கினார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அரசியல் குறித்து எதுவும் பேச வரவில்லை எனவும், மகளின் திருமண விழாவிற்கு அழைப்பு விடுக்கவே வந்தேன் எனவும் ரஜினிகாந்த் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்