இந்திய பெண் ஒருவர் இந்த பதவியை பெறுவது இதுவே முதல் முறையாகும். இதனால் அவரது தந்தை ரஜினிகாந்த் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இது குறித்து ரனிஜிகாந்த் கூறியதாவது, “எனது மகள் உலக நாடுகளுக்கான பெண்கள் அமைப்பின் இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது ஒரு தந்தையாக, எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.
தென்னிந்திய பெண்களின் நிலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்வதும், அவர்களின் உரிமைக்காக ஐ.நா.சபையில் குரல் கொடுப்பதும் இனி ஐஸ்வர்யாவின் பொறுப்பு. பாடகி, இசை அமைப்பாளர், சமூக சேவகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்ட ஐஸ்வர்யா தனுஷ், சினிமா சண்டை கலைஞர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.