காவேரி மருத்துவமனை முன்பு ரஜினிகாந்த் பேட்டி

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (21:31 IST)
திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் காவேரி மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
 
இந்திய அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதி அவர்கள் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். கருணாநிதி தூங்கி கொண்டிருந்தார். கருணாநிதியுடன் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்பட அனைவரையும் பார்த்தேன். அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறினேன்
 
என்னால் ஆறுதல் மட்டுமே கூறமுடியும். கருணாநிதி அவர்கள் மிக விரைவில் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்