ரஜினி அதிரடி: இணையதளம், செயலி அறிமுகம்!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2018 (17:39 IST)
தனது அரசியல் பிரவேசம் குறித்து நேற்று அறிவித்த பிரபல நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ஒருங்கிணைக்க புதிய இணையதளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காந்திருந்து, காத்திருந்து 20 வருடங்களுக்கு பின்னர் அது நடந்திருக்கிறது. பல்வேறு கால கட்டங்களில் அரசியல் குறித்த கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு நழுவிய ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார்.
 
தனது ரசிகர்கள் மத்தியில் நேற்று பேசிய ரஜினி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி என அறிவித்து அரசியல் களத்தை பற்றவைத்தார்.
 
இந்நிலையில் ரசிகர் மன்ற இளைஞர்களை ஒன்றிணைக்க புதிய இணையதளம் ஒன்றை உருவாக்கினார் ரஜினி. www.rajinimandram.org என்ற பெயரில் இணையதளத்தை உருவாக்கினார் ரஜினி. பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்க இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ரஜினி மன்றம் என்ற செயலியையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என அழைப்பு விடுத்துள்ளார் ரஜினி. இந்த செயலியில் பெயர், மற்றும் வாக்காளரை அடையாள அட்டை எண் போன்றவற்றையும் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்