ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் விபத்தில் உயிரிழப்பு - நிர்வாகிகள் அதிர்ச்சி

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (13:40 IST)
தர்மபுரி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் மகேந்திரன் (52). இவர்  சென்னை தி. நகர் பகுதியில் நடைபெற இருந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று நள்ளிரவு சென்றபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் மகேந்திரன் உட்பட காரில் பயணித்த 5பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் அப்பகுதியினரால் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.மற்ற நால்வரும் தீவிர சிகிச்சை  பெற்று வருகின்றனர்.
 
இது குறித்து வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் சோளிங்கர் ரவி வெளியிட்டுள்ள இரங்கள் செய்தி குறிப்பில் : ’மகேந்திரன் விபத்தில் மரணமடைந்த செய்தியைக் கேட்டு அதிச்சி அடைந்தோம். அவரை இழந்து வாடும்  அவரது குடும்பத்தார்க்கும், தர்மபுரி மாவட்ட மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.’ 
 
இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பிற மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர்கள் நிர்வாகிகள் இரங்கள் தெரிவித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்