காத்திருந்து காத்திருந்து கடுப்பான ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்; கடைசியில் எடுத்த அதிரடி முடிவு

சனி, 9 பிப்ரவரி 2019 (10:03 IST)
நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த வருடம் அறிவித்தார். இதையடுத்து, தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் அவரது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். 
ஆனால் தற்போது வரை கட்சியையும் ஆரம்பிக்கவில்லை, அதற்கான சிறு அறிகுறிகளும் இல்லை. தொடர்ந்து படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் மன்றத்தின் கோட்பாடுகளை மீறியதாக கூறி அவ்வப்போது நிர்வாகிகள் மட்டும் நீக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைக்காக காத்திருந்து காதிருந்து கடுப்பான கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனையறிந்த ரஜினி மதியழகனை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 
கட்சி ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகியும் இதுவரை கட்சி பெயர், சின்னம் ஒன்றையுமே ரஜினி அறிவிக்கவில்லையே, என்ன தான் நடக்கப்போகிறது என பல மக்கள் மன்ற நிர்வாகிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றனராம். ஆனால் இதெல்லாம் ரஜினிக்கு தெரியாது. தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டுமே அவருக்கு தெரியும்.....

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்