திருவாரூருக்கு ஜனவரி 28 ஆம் தேதி நடக்கும் என தேர்தல் அறிவித்த சூட்டோடு தேர்தல் ரத்து செய்தியையும் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவித்த உடனே திமுக, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருந்தனர். அதிமுக வேட்பாளர் தேர்வின் கடைசிக் கட்டத்தில் இருந்தது. தேமுதிக, பாமக ஆகியக் கட்சிகள் தேர்தல் குறித்து எந்த தகவலும் அறிவிக்காமல் இருந்தனர். இப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் தேர்தல் ஆணையத்தின் மீதான தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
’ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவும், கேள்விக்குறியாகவும் மாறியிருப்பது கண்டனத்திற்குரியது. கஜாப் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையான நிவாரணப்பணிகள் இன்னும் வழங்கப்படாத நிலையில் மக்கள் யாரும் தேர்தல் வேண்டும் என்றும் கேட்கவில்லை,அது போல தேர்தல் அறிவித்த பின்பு தேர்தல் வேண்டாம் என்றும் சொல்லவில்லை. புயல் பாதிப்பை அறியாமல் தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்ததை மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர்’.