அதிமுகவிற்கு சவால்விட்ட ரஜினிகாந்த!! எதற்காக தெரியுமா?

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (07:47 IST)
சென்னை வெள்ளத்தின் போது அதிமுகவினர் நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டியது போல ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கஜா புயல் நிவாரணப் பொருட்களில் ரஜினியின் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர்.
கடந்த 2015 டிசம்பர் பெரு வெள்ளத்தின் போது, சென்னை, கடலூர் போன்ற மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அப்போது அதிமுகவினர் தமிழகமெங்கிலிருந்தும் வந்த நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அலப்பறை செய்தனர். இதற்கு அப்போது கடும் விமர்சனம் எழுந்தது. 
நீங்கள் மட்டும் தான் ஸ்டிக்கர் ஒட்டுவீர்களா நாங்களும் ஸ்டிக்கர் ஒட்டுவோம் என்ற வகையில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் கஜா புயலுக்கு நிவாரணமாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் கொடுத்த உணவுப் பொட்டலத்தில் ரஜினியின் படம் இடம்பெற்றிருந்தது. இதனைப்பார்த்த பலர் இதற்கு கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்