நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார்கள். ஆனால் அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. போருக்கு தயாராக இருங்கள் என்று கூறிவிட்டு அமைதியாக இருக்கிறார்.
ஆனால் அவரை சுற்றியுள்ளவர்கள் அவர் மிக விரைவில் அரசியலுக்கு வருவார், அதுதொடர்பாக அறிவிப்பார் என கூறுகிறார்கள். கடந்த 12-ஆம் தேதி அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அன்றைய தினக் அவரது அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு நிச்சயம் இருக்கும் என பெரிதாக பேசப்பட்டது.
இதனால் அவரது ரசிகர்கள் காலையில் இருந்து மிகவும் உற்சாகத்துடன் காத்திருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மனமுடைந்த ரஜினியின் ரசிகர் ஒருவர் பால்டாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேலம் ரசிகர்மன்ற நிர்வாகி ஏழுமலை கூறியபோது, தனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ரஜினியை பிடிக்கும் எனவும், ரஜினின்னா உயிர் எனவும் கூறியுள்ளார்.
கட்டிட வேலைக்கு செல்லும் ஏழுமலை ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் முன்னர் ரஜினி படத்துக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சல்யூட் அடித்துவிட்டு தான் செல்வாராம். இந்நிலையில் வழக்கத்தை விட இந்த வருடம் அவரது பிறந்தநாளன்று அரசியலுக்கு வருவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ஏழுமலை அரசியல் குறித்த அறிவிப்பு வெளியாகாததால் மனமுடைந்து நேராகா உரக்கடைக்கு சென்று பால்டாயில் வாக்கி வந்து தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள மைதானத்தில் வைத்து குடித்துள்ளார். பின்னர் கடைசியாக தனது மனைவியையும், குழந்தைகளையும் பார்க்க ஆசைப்பட்டு வீட்டுக்கு வந்ததும் மயங்கி, வாயில் நுரை தள்ளி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.