சசிகலாவின் வருகையை எதிர்நோக்கும் அதிமுக அமைச்சர்! இது புதுசால இருக்கு...

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (15:14 IST)
சசிகலா சிறை தண்டனையிலிருந்து சட்ட ரீதியாக வெளியே கொண்டு வந்தால் அது மகிழ்ச்சிதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் தினகரன் தனது பேட்டியில் சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அவர் நிச்சயம் விரைவில் வெளியே வருவார் என பேட்டி அளித்தார். 
 
இதனை தொடர்ந்து அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டிடிவி தினகரன், சசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்ட ரீதியாக வெளியில் கொண்டு வந்தால் அது மகிழ்ச்சிதான். அப்படியே வெளிவந்தாலும் ஆட்சியில் எந்த மாற்றமும் இருக்காது. ஏமாற்றமே மிஞ்சும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இதே ராஜேந்திர பாலாஜி இதற்கு முன்னர் அமமுக பொதுச் செயலாளரான தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலா பெயரையே பயன்படுத்தவில்லை. சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டுவர தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுயநலத்தோடு செயல்பட்டு வருகிறார் என சசிகலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்