மத்தியில் பாஜகவுக்கு ஜால்ரா… மாநிலத்தில் பாஜக எதிர்ப்பு – பொங்கிய அதிமுக அமைச்சர்

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (16:01 IST)
திமுக மத்தியில் பாஜகவுக்கு ஜால்ரா அடிப்பதாகவும் தமிழகம் வந்தால் மட்டும் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பதாகவும் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ‘திமுகவினர் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு நன்றாக ஜால்ரா அடிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு வந்தால் மட்டும் பாஜக தீவிரவாத இயக்கம், மதவாத இயக்கம், ,அன்னிய சக்தி, முஸ்லிம் சமூகத்தினருக்கு விரோதமானது எனவும் போலியாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.’ எனக் கூறினார்.

மேலும் அங்குள்ள எம்பிகள் 'நாங்கள்தான் உங்களின் உண்மையான நண்பர்கள். எங்களுடன் தமிழகத்தில் கூட்டணி வைக்கத் தவறிவிட்டீர்கள். உங்களின் நிஜ நண்பர்களைத் தேடிப் பிடிக்க மறந்துவிட்டீர்கள். அதனால்தான் உங்களுக்குத் தமிழகத்தில் தோல்வி அடைந்துள்ளீர்க்ள் என பாஜக எம்.பிகளிடம் கூறுகின்றனர்.  இதையெல்லாம் அவர்கள் ஏன் கூறவேண்டும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்