அதிமுகவில் எந்த புதிய பதவிக்கும் விதிமுறைகளில் இடமில்லை: சசிகலா வழக்கறிஞர் பேட்டி

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (19:47 IST)
அதிமுகவில் எந்த புதிய பதவிக்கும் விதிமுறைகளில் இடமில்லை என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் அதிமுகவில் எந்த புதிய பதவிக்கும் விதிமுறைகளில் இடமில்லை என்ற வழக்கு இடைக்கால உத்தரவு நிலுவையில் உள்ளது என்றும் அவர் ஞாபகப்படுத்தினார். மேலும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் இந்த வழக்கு குறித்து பேசாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சசிகலா வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் அவர்களின் இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்