மோசமான ஆர்கனைசேஷன்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கொதிப்பு..!

திங்கள், 11 செப்டம்பர் 2023 (07:42 IST)
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நேற்று நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி பார்க்க வந்த பொதுமக்கள் பலர் அதிருப்தியுடன் திரும்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சரியான கார் பார்க்கிங் இல்லை சரியான, ஆர்கனைசேஷன் சரியில்லை என டிக்கெட் வாங்கி வந்த பொது மக்களுக்கு மதிப்பு மரியாதை இல்லை என பலர் புலம்பி வருகின்றனர். 
 
இருபதாயிரம் பேர் உட்காரக்கூடிய ஒரு இடத்தில் 50,000 டிக்கெட்டுகளை விற்பனை செய்திருப்பதாகவும் 5000 ரூபாய் டிக்கெட்டில் சாதாரண டிக்கெட் வாங்கியவர்கள் எல்லாம் உட்கார்ந்து கொண்டார்கள் என்றும் இதை ஒரு ஒழுங்குமுறை படுத்தவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
பெரும்பாலான பொதுமக்கள் இசை நிகழ்ச்சியை காணாமல் திரும்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. ஐயாயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய எங்களுக்கு இந்த நிகழ்ச்சியை நடத்தி ஆர்கனைசேஷன் பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் ஏ ஆர் ரகுமான் இது போன்ற மோசமான ஆர்கனைசேஷன்  உடன் இணைந்து செயல்பட கூடாது என்றும் பலர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்