இன்று இடி மின்னலுடன் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

புதன், 4 அக்டோபர் 2023 (07:38 IST)
இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
தென்மேற்கு பருவமழை முடிவடைந்து விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழை மழை பெய்யக்கூடும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்