இன்னும் சிலமணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran

வியாழன், 9 மே 2024 (16:57 IST)
இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே கோடை மழை பெய்து குளிர்வித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்