சென்னையை வெளுத்த கனமழை! மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பரிதாப பலி!

Prasanth K

சனி, 23 ஆகஸ்ட் 2025 (08:48 IST)

சென்னையில் நேற்று இரவு முதலாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அவ்வாறாக நேற்று மாலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

 

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சேர்ந்துள்ள நிலையில் அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் இன்று காலை தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) பணிக்கு செல்ல கண்ணகி நகரில் சென்றபோது தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்தபோது அதில் அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து வெளியேறிய மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்