21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran
செவ்வாய், 9 ஜனவரி 2024 (11:52 IST)
இன்று பிற்பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் திண்டுக்கல், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 21 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழை பெய்யும் என்றும்  கூறப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து மேற்கண்ட 21 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்