காலையிலேயே காத்திருக்கும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth K

திங்கள், 6 அக்டோபர் 2025 (08:14 IST)

வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நேற்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் அனேக மாவட்டங்களில் இரவில் லேசானது முதல் மிதமான மழை பொழிந்தது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கும் ஆங்காங்கே மிதமான அளவில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது,

 

அதன்படி இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தின் தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்