'சுவாதி ஆப்' ரயில் பெண் பயணிகளுக்காக புதிய அப்ளிகேஷ்ன் விரைவில் அறிமுகம்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (14:30 IST)
ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பை கருதி ரயில்வே பாதுகாப்பு படை புதிய அப்ளிகேஷனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.




சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'சுவாதி ஆப்' என்ற மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த உள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையுடன் இன்போசிஸ் நிறுவனமும் இணைந்து இந்த ஆப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆபத்து நிகழும் நேரத்தில் இந்த அப்ளிகேஷனில் உள்ள எஸ்ஒஎஸ் பட்டனை அழுத்தினால், உடனடியாக அந்த தகவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகிலுள்ள ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் கிடைக்கும். இதனால் மூலம் உதவி தேவைப்படும் ரயில், அல்லது அடுத்ததாக நிற்கப்போகும் ரயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் அங்கு செல்ல இது உதவும் என கூறப்பட்டுகிறது.

இதே போல் டெல்லியில் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்ட நிர்பயா பெயரில், பெண்கள் பாதுகாப்பிற்காக ஒரு மொபைல் அப்ளிகேஷன் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்