முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் திடீர் சோதனை: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (07:16 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னை மதுரை ஈரோடு நாமக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள தங்கமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருவதாகவும் இதனை அடுத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள் கடந்த 2016 முதல் 2020 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி சி விஜயபாஸ்கர் கே சி வீரமணி உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்