காலம் போன காலத்துல ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியான சரத் குமார் – எந்த படத்தில் தெரியுமா?

வெள்ளி, 8 ஜனவரி 2021 (11:33 IST)
நடிகர் சரத்குமார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு கணவராக நடித்துள்ளாராம்.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார்.

படத்தில் அவர் ஐஸ்வர்யா ராய்க்குக் கணவராக நடித்தாலும் வந்தியத் தேவன், ஆதித்ய கரிகாலன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய கதாபாத்திரங்களோடுதான் அதிக காட்சிகள் அவருக்கு இருக்குமாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்