சரத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர்: விரைவில் குணமாக வாழ்த்து

செவ்வாய், 8 டிசம்பர் 2020 (19:36 IST)
நடிகர் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையுமான ராதிகா தனது டுவிட்டரில் உறுதி செய்தார். அதேபோல் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் தனது தந்தை கொரோனாவ பாதிக்கப்பட்டு ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தனது இன்ஸ்டாகிராம் தெரிவித்திருந்தார் 
இதனை அடுத்து சரத்குமார் விரைவில் குணமாக திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரத்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்ததாகவும் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது டுவிட்டரில் சரத்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்ததும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் கேட்டறிந்தேன்/ விரைவில் அவர் பூரண குணமடைய விழைகிறேன் என்று பதிவு செய்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்