அரசியலில் குதிக்கின்றார் ராதிகா: கணவர் கட்சியில் முக்கிய பொறுப்பு

புதன், 3 மார்ச் 2021 (11:18 IST)
நடிகை ராதிகா சமீபத்தில் சித்தி என்ற சீரியல் இருந்து விலகிய நிலையில் முழுநேர அரசியல்வாதியாக மாறப் போகிறார் என்று கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது நடிகை ராதிகாவுக்கு சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முக்கிய பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது 
 
அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு கட்சி அவருக்கு சற்று முன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த பதவி யாருக்கு வழங்கப்பட்டது
 
மேலும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் மீண்டும் சரத்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தூத்துக்குடி தொகுதியில் நடிகர் நடிகை ராதிகா போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்