கமல் ஆஃபிசுக்கு சரத்குமார் விசிட்: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை?

சனி, 27 பிப்ரவரி 2021 (11:19 IST)
மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமலை  சந்தித்துள்ளார் சரத்குமார். 

 
தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரின் அகில இந்திய மக்கள் சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியுள்ளது.  
 
இதனைத்தொடர்ந்து இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் சென்னை வடபழனியில் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்து, தங்கள் கட்சிகள் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிவித்தனர். 
 
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலுடன் சரத்குமார் சந்தித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் ஐ.ஜே.கே.-சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்