ராதாபுரம் தேர்தல் வழக்கு : விறுவிறு வாக்கு எண்ணிக்கை ! வெற்றி யாருக்கு ..?

வெள்ளி, 4 அக்டோபர் 2019 (17:37 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பதிவான ஓட்டுக்களை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி  இன்று தேர்தல் பணியாளர்கள் எண்ணி வருகின்றனர்.
இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுறை என்பர் 69,590  வாக்குகளும், திமுக வேட்பாளர் 69541 வாக்குகளும் பெற்றனர். இதில் அப்பாவுவை விட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார்.
 
இதையடுத்து, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பதிவான ஓட்டுக்களில் 203 தபால் ஓட்டுக்களை எண்ணவில்லை என திமுக வேட்பாளர் அப்பாவு வழக்குத் தொடர்ந்திருந்தார். 
 
ராதாபுரம் தேர்தல் வழக்கில் ,வாக்கு எந்திரங்களில் கடைசி 3 சுற்றுகளின் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளன.வாக்கு எண்ணிக்கை 19, 20, 21 வது சுற்றுகளின் வாக்குகளை எண்ணும் பணி நடைபெறுகிறது.
 
உயர் நீதிமன்ற பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு அலுவலர் சாய் சரவணன் முன்னிலையில் தேர்தல் ஆணைய அலுவலர்கள் 24 பேர் வாக்குகளை எண்ணுகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்