குற்றங்களை தடுக்க காவலர்களை விரைவு ரோந்து இருசக்கர வாகனங்கள் ! கரூர் எஸ்.பி பகலவன் அதிரடி !

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (22:50 IST)
கரூரில் உள்ள 17 காவல் நிலையங்களில் குற்றங்களை  பரவாமல் தடுக்க  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க 17 இருசக்கர வாகனங்களை கரூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் வழங்கினார்.

திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களில் காவல்துறை துணை தலைவர் அவர்களுக்கும் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வரும் புகார்கள் , தொலைப்பேசி அழைப்புகள் மற்றும் குற்ற சமவங்கள் பற்றி பொதுமக்களிடமிருந்து வரும் தகவல்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் புகார் மனுக்களின் தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஏதுவாக ஒவ்வொரு காவல் நிலையத்திற்க்கும் ஒரு ரேஸ் குழு(RACE -Rapid Action for Community Emergency) என மொத்தம் 109 குழுக்கள் (திருச்சி -30 , புதுக்கோட்டை - 38 , கரூர் - 17 , பெரம்பலூர் - 8 , அரியலூர் -16) காவல்துறை துணை தலைவர் ஆனி விஜயா அவர்கள் முயற்ச்சியால் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டது கரூர் மாவட்டத்திற்க்கான 17 ரேஸ் குழுக்கள் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாள்ர் அலுவலக வளாகத்தில் எஸ்.பி பகலசன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

மற்ற குழுக்களை அந்தந்த மாவட்ட காவல் உயர் அதிகாரிகளால் துவக்கிவைக்கப்பட உள்ளது.மேலும் இந்த ரேஸ் குழுக்களானது பொதுமக்களின் குறைகள் , புகார்கள் , குற்ற நிகழ்வுகள் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற புகார் அளிக்க 5 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்குழுவின் பணியாணது காவல் துறை துணை தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வரும் தொலைப்பேசி தகவல்களுக்கு உடனடியாக சம்பவ இடன் சென்று ஆரம்பகட்ட விசாரணை செய்தல் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடியாக சம்பவ இடம் சென்று விசாரித்தல் உள்ளிட்ட பணிகளை இக்குழுவின் பணி என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் அறிவுறுத்தியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்